மேலும் செய்திகள்
லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு
31-Jul-2026
புதுச்சேரி: உழவர்கரையில் மக்களை அச்சுறுத்திய தேனீக்களை தீயணைப்பு துறையினர் தீவைத்து அழித்தனர். உழவர்கரை தொகுதி, வின்சென்ட் வீதி பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அதே வளாகத்தில் உள்ள பெரிய இலவ மரம் ஆகிய இடங்களில், தேன் கூடுகள் கட்டியிருந்தன. இந்தக் கூடுகளிலிருந்து வெளியேறிய தேனீக்கள், அப்பகுதியில் நடமாடும் பொதுமக்கள், அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அவ்வப்போது கொட்டி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து வின்சென்ட் வீதி பொதுமக்கள், உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமியிடம் தெரிவித்தனர். அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்பேரில், நேற்று இரவு 7:15 மணிக்கு பொதுப்பணித்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஒருங்கிணைந்து அங்கு விரைந்து, கிரேன் உதவியுடன் தீப்பந்தங்களை பயன்படுத்தி தேனீக்களைத் தீயிட்டு அழித்தனர். ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தேனீக் கூடுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது.
31-Jul-2026