உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா

 பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா

புதுச்சேரி: கோரிமேடு அடுத்த இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ேஷத்திரபால பைரவர் ஜென்மாஷ்டமி பிறந்த தினத்தை முன்னிட்டு சங்காபி ேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 8:00 மணிக்கு 108 வலம்புரி சங்கு ஸ்தாபனம், கலச பூஜை, மகாயாகம், பூர்ணாஹூதி, ேஷத்திரபால பைரவருக்கு கலசாபி ேஷகம், சங்காபி ேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை, உற்சவர் உள்புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி