பாரத் வித்யாஷ்ரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
வில்லியனுார்:ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 46 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி லோகேஸ்வரி 95.8 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவர் சஞ்சய் 92 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவர் தினேஷ்ராம் 88.6 சதவீதம் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 59 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் தருன்குமார் 95.4 சதவீதம் மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவி சாந்தநாயகி 92.4 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி பிரியதர்ஷினி 88.6 சதவீதம் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.அவர்களை பள்ளி நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி., இனிப்புகள் வழங்கி, பாராட்டினார். சாதனைக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர் களையும் கவுரவபடுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன், பள்ளி முதல்வர் சாந்திஜெயசுந்தர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.