உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பரதநாட்டிய நிகழ்ச்சி சான்றிதழ் வழங்கல்

 பரதநாட்டிய நிகழ்ச்சி சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 15ம் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விழாவையொட்டி, கோவில் கலையரங்கில் நாட்டியாஞ்சலி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று செங்கல்பட்டு இசைக்குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு புதுச்சேரி நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிறுவனர் சூசைராஜ் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். அருண், அழகு ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி