மேலும் செய்திகள்
கல்லை தமிழ் சங்கத்தில் நுால் வெளியீட்டு விழா
23-Dec-2025
புதுச்சேரி: புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி பாரதி விழா சங்கம் வளாகத்தில் நடந்தது. தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனி மோகன்தாசு முன்னிலை வகித்தார். விழாவில் ராமநாதபுரம் கம்பன் கழகத் தலைவர் அரிமா சுந்தரராசன், சிவஞான பாலய சுவாமிகள் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு ஆகியோருக்கு மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் பொன்னுத்தாய்க்கு மகாகவி பாரதி பெண் விருது வழங்கப்பட்டது. விழாவில், மருத்துவர் சங்கரதேவி, பொருளாளர் அருள் செல்வம், துணை தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், பாவலர் சிவேந்திரன், ஆனந்தராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
23-Dec-2025