பாரதியார் பிறந்த நாள்
புதுச்சேரி: பாரதிதாசன் அறக்கட்டளை, இதயா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், பாரதியார் பிறந்த நாள் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் அலமேலு வரவேற்றார். கவிஞர் கவுசல்யா பிரேம்ராஜ் வாழ்த்தி பேசினார். அறக்கட்டளை செயலர் வள்ளி, கவிஞர்கள் சுசீலா, விசாலாட்சி, சரசுவதி வைத்தியநாதன், விஜயலட்சுமி, ரமேஷ் பைரவி, பிரமீளா மேரி முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். முனைவர் மலைமகள் நன்றி தெரிவித்தார்.