மேலும் செய்திகள்
பஸ் நிலையத்தில் மாடுகள் திரிவதால் பயணிகள் அவதி
04-Nov-2024
மைசூரில் ரூ.100 கோடியில் புதிய பஸ் நிலையம்
05-Nov-2024
புதுச்சேரி : மாணவர்கள், பெற்றோர் நலச் சங்க தலைவர் பாலா வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரியில் புதிய பஸ் நிலையத்தில், உள்ள 31 கடைகளுக்கு இ.டெண்டர் மூலம் ஏலம் விட வேண்டும். இரு சக்கர வாகன பார்க்கிங் மற்றும் கழிப்பிடங்களுக்கு இ.டெண்டர் விடப்பட உள்ளது. ஏற்கனவே பஸ் நிலையத்தில், 16 பேர் கடை நடத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, வெளிப்படையாக நகராட்சியினர் டெண்டர் விடவேண்டும். புதுச்சேரி அரசு பஸ் டெப்போவிற்கு, பஸ் நிலையத்தின் உள்புறமாக செல்ல வழி அமைக்க வேண்டும்.பஸ் நிலையத்தில், ஓட்டல், அவசர சிகிச்சை அளிக்க சிறிய மருத்துவமனை, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சென்னை, பெங்களூரு போல பஸ் நிலையத்தில், இரும்பாலான சுழற்சி முறை மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
04-Nov-2024
05-Nov-2024