உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் பைக் திருட்டு: விழுப்புரம் வாலிபர்கள் கைது

புதுச்சேரியில் பைக் திருட்டு: விழுப்புரம் வாலிபர்கள் கைது

திருபுவனை : புதுச்சேரியில் பைக் திருடிய வழக்கில் விழுப்புரத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மதகடிப்பட்டு எல்லையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பைக்கில் விழுப்புரம் நோக்கி சென்ற இருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் , விழுப்புரம் பெரிய காலவனி, ஜி.ஆர்.பி.வீதி சங்கர் மகன் பழனிவேல்,30; சித்தேரிக்கரை வேடியப்பன் கோவில் வீதி செல்வம் மகன் நிஜந்தன்,30; என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக், மதகடிப்பட்டு பகுதியில் திருடியது என்பது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி