உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக பகுதியில் பைக் திருட்டு: 3 பேர் கைது

தமிழக பகுதியில் பைக் திருட்டு: 3 பேர் கைது

திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் வாகன சோதனையின் போது, மோட்டார் பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் குமராபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த மூன்று பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒருவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் சோதனை செய்ததில் தனது உடையில் பட்டாக் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீசார் மூன்று பேரையும் காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சந்தை புதுகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுல், 21; அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ், 24; மற்றொரு நபர் தமிழகப் பகுதியை சேர்ந்த சிறுவர் என்பது தெரியவந்தது.மேலும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் பைக் திருவண்ணாமலை பகுதியில் இருந்து திருடி வந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து திண்டிவனம், கிளியனுார், திருக்கோவிலுார் பகுதியில் திருடிய, மேலும் மூன்று மோட்டார் பைக்குகள், பட்டாக்கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, மூன்று பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு, இருவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ