மருத்துவமனை முன்பு பைக்குகள் நிறுத்தம் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அவதி
புதுச்சேரி: அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயில் முன்பு நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.புதுச்சேரி இந்திரகா காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் வழியில், இரு சக்கர வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்பவர்கள், அங்குள்ள கடைக்கு வருபவர்களும் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். மருத்துவமனை அருகே பிரெஞ்சி பள்ளி, சர்ச் ஆகிய பகுதிக்கு வருபவர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில், இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனத்தால், மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல், அவதிக்குள்ளாகி வருகிறது.மருத்துவமனை சுற்றுச்சுவர் முன்பு அதிகம் இடம் இருந்தும், இருசக்கர வாகனத்தை தள்ளி நிறுத்தாமல், சாலையிலேயே விடுவதால், மருத்துவமனைக்கு செல்லும் மருத்துவர்களின் கார்கள் கூட செல்ல முடியாமல் இடையூறாக இருக்கிறது. சாலையிலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.