பிம்ஸ் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா
புதுச்சேரி : கனக செட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி சேர்மன் ஜேக்கப் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ரேணு ஆண்டறிக்கை வாசித்தார். பதிவாளர் அனில் பூர்த்தி அறிமுக உரையாற்றினார்.மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் தலைமையில் மாணவர்கள் மருத்துவத்திற்காக தம்மை அர்ப்பணிப்பதாக உறுதி மொழி ஏற்றனர்.சிறப்பு விருந்தினர் புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு, 2019ம் ஆண்டு 147 இளங்கலை மருத்துவ மாணவர்கள், 2021ம் ஆண்டு 43 முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். துணை வேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், 'டாக்டர்கள் சமுதாயத்திற்கு தங்களை அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்' என்றார்.சிறந்த இளங்கலை பிரிவு மாணவர் சுஜித், சிறந்த ஆல்ரவுண்டராக மாணவி சாரா கேத்ரின், சிறந்த விளையாட்டு வீரராக மாணவி ராகபிரியா ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. கூடுதல் துணை முதல்வர் சுஜாதா, சிறந்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆய்வில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருது வழங்கும் நிகழ்வை கூடுதல் துணை முதல்வர் அபர்ணா ஒருங்கிணைத்தார்.சிறந்த ஆய்வு கட்டுரைகள் வெளியிட்ட பிம்ஸ் மருத்துவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி கூடுதல் மருத்துவ கல்வி ஒருங்கிணைப்பாளர் சிவா தலைமையில் நடந்தது. இளங்கலை துணை முதல்வர் நிஷாந்த், முதுகலை துணை முதல்வர் ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர்.பிம்ஸ் பொது நிர்வாக மேலாளர் ஜார்ஜ் தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் நாயர் இக்பால் நன்றி கூறினார்.