உயிர் உரங்கள் செயல் விளக்கம்
புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரியில் பயிலும் இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்து பண்டசோழநல்லுார் கிராமத்தில் செயல்விளக்கம் அளித்தனர். வேளாண் கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் திருமலை, ஆகியோர் தலைமை தாங்கினர். பயிற்சியில் இறுதியாண்டு மாணவர்கள் விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் தாவர வளர்ச்சியில் அதன் முக்கியத்துவம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.