உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பா.ஜ., நிர்வாகி நடவடிக்கை

உழவர்கரையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பா.ஜ., நிர்வாகி நடவடிக்கை

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரைபா.ஜ., மாநில துணைத் தலைவர் சரவணன் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உழவர்கரை தொகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ., மாநில துணைத் தலைவர் சரவணன். இவர், உழவர்கரை தொகுதியில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். புதுச்சேரியில் பெய்த கனமழையால் உழவர்கரை தொகுதி பாவாணர் நகர், ஜவகர் நகர், எம்.ஜி.ஆர்., நகர், மேரி உழவர்கரை, மரியாள் நகர்பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதியடைந்தனர். தகவலறிந்த பா.ஜ., மாநில துணைத் தலைவர் சரவணன், அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து மழை நீர் தேங்குவது குறித்து கேட்டறிந்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை தொடர்ந்து தண்ணீர் வெளியேறியது. பின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை