உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பா.ஜ., நிறுவனர் பிறந்த நாள் விழா

 பா.ஜ., நிறுவனர் பிறந்த நாள் விழா

அரியாங்குப்பம்: ஜூலை 7-: பா.ஜ., நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளையொட்டி, தவளக்குப்பத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்த்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மணவெளி தொகுதி பா.ஜ., சார்பில், தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில், அவரது உருவப்படத்திற்கு முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமையில் கட்சியினர் மலர்த்துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நாட்டுப்பற்று, கல்வி மேம்பாடு, தேசிய ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !