பா.ஜ., காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. புதுச்சேரி பா.ஜ., காரைக்கால் மாவட்டம் சார்பில், நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று காரைக்காலுக்கு வருகை தந்தார். அவரை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், ராஜசேகர் எம்.எல்.ஏ., ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, நிரவி திருப்பட்டினம், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளின் கிளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், காரைக்கால் மாவட்டத் தலைவர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் கணபதி , மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சென்று, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்து கூற வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என உறுதியுடன் செயல்பட வேண்டும்' என்றார். பின் சமுதாயத் தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. ஏற்பாடுகளை தொகுதி தலைவர்கள் மணிமாறன், சிவமாணிக்கவேல், பிரபு, மாநில செய்தி தொடர்பாளர்கள் அருள்முருகன், செல்வராஜ், மாநில பொது செயலாளர் மோகன்குமார், மாநில செயலாளர் அமுதா ராணி, மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.