பா.ஜ., பிரமுகர் சோலார் தெரு மின்விளக்கு அமைப்பு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் தனது சொந்த செலவில் அமைக்கப்பட்ட சோலார் தெருமின் விளக்குகளை பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் இயக்கி வைத்தார். முத்தியால்பேட்டை தொகுதி தேபேசன் பேட், குட்டி கிராமினி வீதி, சவுக்கு பேட் வீதி, அம்பேத்கர் நகர், டி.வி.நகர், அந்தோணியர் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் தெருமின் விளக்குகள் அமைக்க பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அரசின் அனுமதி பெற்று தனது சொந்த செலவில் அப்பகுதி வீதிகளில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. அதனை மக்கள் பயன்பாட்டிற்கு, பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் இயக்கி வைத்து, பார்வையிட்டார்.