உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி வளர்கிறது பா.ஜ., தலைவர் ராமலிங்கம் பெருமிதம்

புதுச்சேரி வளர்கிறது பா.ஜ., தலைவர் ராமலிங்கம் பெருமிதம்

புதுச்சேரி: புதுச்சேரி 'டபுள் இன்ஜின் ஆட்சியில் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது, என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது; பிரதமர் மோடி 4 ஆண்டுகளுக்கு முன் விதைத்த வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகிய 4 துாண்களைக்கொண்ட பெஸ்ட் புதுச்சேரி திட்டம் இன்று உண்மையாகியுள்ளது. இதனால், சமூக முன்னேற்றக் குறியீட்டில் புதுச்சேரி இன்று இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. ரூ.2,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதுவரை மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த 'மூலதன முதலீட்டு சிறப்பு உதவித் திட்டம்', இப்போது புதுச்சேரிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர்., சாலைத் திட்டத்திற்கு ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்தவும் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டத் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. ​ரேஷன் திட்டத்தில் முறைகேட்டைத் தவிர்க்க, இந்தியாவில் முன்னோடித் திட்டமாக புதுச்சேரியில் 'டிஜிட்டல் நாணயம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பை, ஷூக்களுக்குப் பதிலாக நேரடியாக ரூ.500 வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஜிப்மர் புற்றுநோய் மைய நவீனமயமாக்கல் மூலம் புதுச்சேரி 'மெடிக்கல் டூரிசம்' மையமாக மாறும். வரும் 2047-க்குள் 'வளர்ச்சியடைந்த புதுச்சேரி' என்பதே எங்களின் இலக்கு என்றார். பேட்டியின்போது, அமைச்சர் நமச்சிவாயம் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ