மத்திய அமைச்சரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுஷ் மருத்துவமனையை முழு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அசோக்பாபு எம்.எல்.ஏ., மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.புதுச்சேரிக்கு வந்த மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவை, அசோக் பாபு எம்.எல்.ஏ., சந்தித்தார். பின் அவரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில், புதுச்சேரியில், 5 படுக்கை வசதிகளுடன், கடந்த 2023ம் ஆண்டு ஆயுஷ் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.இந்த மருத்துவமனை செயல்படாமல் இருக்கிறது. புறநோயளிகள் பிரிவில், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. அதை சரி செய்து, மருத்துவமனையை முழு செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அவர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.