உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முதலியார்பேட்டையில் பா.ஜ., கருத்து கேட்பு

 முதலியார்பேட்டையில் பா.ஜ., கருத்து கேட்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலியார்பேட்டை, உழந்தைக்கீரப்பாளையம் சக்திவேல் பரமானந்தா சித்தர் கோவில் அருகில் இருந்து துவங்கிய நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, மாநில தேர்தல் மேலாண்மை குழு இணை பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ