மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுகம்
14-Apr-2025
புதுச்சேரி; காங்., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பரபரப்பு நிலவியது.நேஷனல் ெஷரால்டு ஊழலை திசை திரும்பும் காங்., கட்சியை கண்டித்து, புதுச்சேரி மாநில பா.ஜ., இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜா தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞரணி தலைவர் அற்புதராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் கணபதி, வருண் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல், சோனியா ஆகியோர் பதவி விலககோரியும், காங்., கட்சியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியதுடன், அவர்களின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். பின்னர், வைசியால் வீதியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் அங்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் அண்ணா சாலையில் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால், பா.ஜ.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, திடீர் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பா.ஜ., இளைஞரணியினர் கலைந்து சென்றனர்.
14-Apr-2025