மேலும் செய்திகள்
மதம் சொல்லி அவதுாறு தினேஷ் மனைவி புகார்
06-Oct-2024
புதுச்சேரி : என்மீது அவதுாறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பா.ஜ., மாநில தலைவராகவும் எம்.பி., யாகவும் எனது பணியை புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செய்து வருகின்றேன்.எனது வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாத சிலர், எனக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட சதி செய்கின்றனர். பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.எனக்கு சம்பந்தமே இல்லாத வழக்கை மேற்கோள்காட்டி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இது போன்ற அவதுாறு பரப்பும் செயலில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைஎடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
06-Oct-2024