உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., சிந்தனை அமர்வு கூட்டம்

பா.ஜ., சிந்தனை அமர்வு கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம், மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் அண்ணாமலை ஹோட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக்மாண்டவியா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம்மெக்வல், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா, அமைச்சர் நமசிவாயம், ஜான்குமார், செல்வகணபதி எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலில் எவ்வாறு செயல்படுவது, தேசிய ஜனநாயக கூட்டணியை எப்படி வலுப்படுத்துவது, பிரதமரின் மன் கீ பாத் நிகழ்ச்சியை அனைத்து கிளைகளிலும் கொண்டு செல்வது, நிர்வாகிகள் மத்தியில் கலந்தாய்வு கூட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், செல்வம், தீப்பாய்ந்தான், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு , வெங்கடேசன், கணபதி, மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை