உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் அரசு கொறடா மீது பா.ஜ., மகளிரணி போலீசில் புகார்

முன்னாள் அரசு கொறடா மீது பா.ஜ., மகளிரணி போலீசில் புகார்

புதுச்சேரி : பா.ஜ., தலைவர்களை அ வமதிப்பு செய்த காங்., முன்னாள் அரசு கொறடா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியக்கடை போலீஸ் ஸ்டே ஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம் பா.ஜ., மாநில மகளிரணி தலைவி தாமரைச்செல்வி தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். மனுவில், பிரதமர் நரேந்திரமோடி தாயாரை விமர்ச னம் செய்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கண்டித்து மாநில தலை வர் ராமலிங்கம் தலை மையி ல் ஊர்வலம் நடந்தது . அதற்கு காங்., முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்., அலுவலகத்தில், பா.ஜ., தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகளை பொது அமைதிக்கு சீர்குலைக்கும் வகையில் காணொளி மூலம் வெளிப்படையாக பேசி அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் . அதில் எங்கள் கட்சியினரை அவமதித்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடம் விரோதம் மற்றும் கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது நகர மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், மகளிர் அணி பொதுச் செயலாளர் விஜயலட்சுமி, பிரியா, துணைத் தலைவர் தனலட்சுமி, மாவட்டத் துணைத் தலைவர் உமாபதி, மாவட்ட பொதுச்செயலாளர் அனந்த்பாஸ்கர், குப்பன் ஆகியோர் உடனி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி