உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வைரமுத்துவை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

வைரமுத்துவை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: ராமரை இழிவுபடுத்தி பேசிய கவிஞர் வைரமுத்துவை கண்டித்து, புதுச்சேரியில் பா.ஜ., மாநில மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த கம்பன் விழாவில், விருது பெற்ற கவிஞர் வைரமுத்து, ராமரை அவதுாறாக இழிவுபடுத்தி பேசியுள்ளார். இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலையருகே பா.ஜ., மாநில மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவி தாமரைசெல்வி தலைமை தாங்கினார். பொது செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், துணை தலைவர் ரத்தினவேலு, செயலாளர்கள் தமிழ்மாறன், கோகிலா, இணை அமைப்பாளர் வேல்முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், வைரமுத்துவை கண்டித்து நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, அவரின் உருவபடத்தை கிழித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ