மேலும் செய்திகள்
தமிழக பா.ஜ., கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!
04-Sep-2025
புதுச்சேரி : தேசத்திற்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், பா.ஜ.,வில்பணியாற்றவேண்டும் என, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசினார். புதுச்சேரியில் நடந்த பா.ஜ., மாநில பொதுக்குழு கூட்டத்தில் அவர், பேசியதாவது: பா.ஜ., குடும்ப கட்சியோ, தனி நபர் கட்சியோ அல்ல. இது தொண்டர்களின் கட்சி. மண்டல தலைவராக இருந்த நான் தற்போது மத்திய அமைச்சராக மாறியுள்ளேன். இது, பா.ஜ.,வில் மட்டுமே சாத்தியம். ஜனநாயகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு செயல்படும் கட்சி பா.ஜ., இதை ஒவ்வொரு தொண்டனும் சிறப்பாக செயல்படுத்தினால், புதுச்சேரியில் வெற்றி நிச்சயம். அகண்ட பாரதத்தை அமைப்பதே பிரதமர் மோடியின் எண்ணம். அதனை உருவாக்க அடிமைதனமான செயல்பாடுகளில் இருந்து வெளிவர வேண்டும். தேசத்திற்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், பா.ஜ.,வில்பணியாற்றவேண்டும். அதற்கு, மேடையில் அமர வேண்டும். பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்பது இல்லை. கட்சியில் ஒரு தொண்டனாக, தேசத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். சைக்கிளில் பா.ஜ., கொடியை கட்டிக் கொண்டு பூத் வாரியாக சென்று, கட்சியை பற்றி விழிப்புணர்வு குறித்தும், வியாபாரிகளிடம் சென்று இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்வோம் என்று உறுதிமொழி வாங்கினால், அதுவே தலைசிறந்த முயற்சி. ஒவ்வொரு மண்டல உறுப்பினரும் தினசரி 2 மணி நேரம் கட்சி பணிக்காக செலவிட வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் சேர்ந்து புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை' என்றார்.
04-Sep-2025