புளு ஸ்டார் பள்ளி சாதனை
வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 112 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர் பாலமுருகன் 486 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவி ஹர்ஷனி-483 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி ஜனனி-482 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.பள்ளியில் 451 மதிப்பெண்களுக்கு 11 மாணவர்களும், முதல் வகுப்பில் 89 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அறிவியல் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-97, சமூக அறிவியல்-97 என பாடவாரியாக முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார், பள்ளி முதல்வர் வரலட்சுமி, துணை முதல்வர் சாலை சிவ செல்வம் மற்றும் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.