மேலும் செய்திகள்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
4 hour(s) ago | 19
பார்லியில் குரங்கு தொல்லை; சபாநாயகர் திண்டாட்டம்
5 hour(s) ago | 18
புதுச்சேரி: புதுச்சேரி போத்தீஸில் ரூ. 90 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.புதுச்சேரி போத்தீஸில் ஆண்டுதோறும் தீபாவளி முதல் பொங்கல் வரை 'போத்தீஸ் பெஸ்டிவல் கண்டஸ்ட்' என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு சரியான பதில் அளித்து வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு ரூ. 90 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., மிக்சி, கிரைண்டர் மற்றும் 500க்கும் மேற்பட்ட பரிசு பொருட்களுடன் பம்பர் பரிசாக கார் வழங்கும் விழா பாண்டி மெரினாவில் நடந்தது.போத்தீஸ் மேலாண் இயக்குனர் ரமேஷ், வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இத்தகைய மிகப்பெரிய விழாவை நடத்த வழிவகை செய்த மேலாண் இயக்குநர்களுக்கும், உறுதுணையாக இருந்த நிறுவன ஊழியர்களுக்கும் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதுச்சேரி பொது மேலாளர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார்.ஏற்பாடுகளை போத்தீஸ் சூப்பர் ஸ்டோர்ஸ் மேலாளர் அபூபக்கர், மனிதவள மேலாளர் மகேஷ் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.
4 hour(s) ago | 19
5 hour(s) ago | 18