புத்தகக் கண்காட்சியில் பாவரங்கம்
புதுச்சேரி: தேசிய புத்தகக் கண்காட்சியினையொட்டி புதுச்சேரி தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் சிறப்பு பாவரங்கம் வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்தது. பேராசிரியர் முருகையன் வரவேற்றார். தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர் பாவாணன், கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை சிவக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தமிழறிஞர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நுாலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்னும் தலைப்பில் சிறப்பு பாவரங்கம் நடந்தது. தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவுநர் நெய்தல் நாடன் தலைமை தலைமை தாங்கினார். விழுப்புரம் அன்னியூர் கருணாநிதி அரசு கலைக் கல்லுாரி முதல்வர் அசோகன், கவிஞர்கள் முருகுமணி, வீரமுருகையன், பாலசுப்பிரமணியன், தாகூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கண்ணன் உள்பட பலர் கவிதை வாசித்தனர். சிறந்த கவிதை வாசித்த கவிஞர்களுக்குச் சான்றிழ்களும், நுால்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. கலை பண்பாட்டுத்துறை முன்னாள் இயக்குநர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முனைவர் பா ஞ்ராமலிங்கம் நன்றி கூறினார்.