உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர், லோகநாதன் எழுதிய நுால்களை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். 'நாட்டுபுற மக்களின் நம்பிக்கைகளும், சடங்குகளும்' என்ற ஆய்வு நுால் மற்றும் 'குல்லா போட்ட கத்திரிக்காய்' என்ற குழந்தை பாடல்கள் ஆகிய இரண்டு நுால்களின் வெளியீட்டு விழா, சட்டசபை அலுவலகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி நுால்களை வெளியிட்டார். அதனை சபாநாயகர் செல்வம் பெற்றுக்கொண்டார். அதில், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், நாஜிம், செந்தில்குமார், முன்னாள் பாசிக் மேலாளர் விசுவநாதன், ரவிந்திரகுமார், விஜயராஜ், ரவிச்சந்திரன், முத்து, வெங்கடபதி, மணிமொழி, கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ