உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவனுக்கு கருவிழி பாதிப்பு; போலீசில் பெற்றோர் புகார்

சிறுவனுக்கு கருவிழி பாதிப்பு; போலீசில் பெற்றோர் புகார்

புவனகிரி; புவனகிரி அருகே பள்ளியில் விளையாடும் போது, சிறுவனின் கருவிழி பாதிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.புவனகிரி அருகே வட தலைக்குளம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் யோகேஷ்வரன்,7; மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுவன் விளையாடும் போது கீழே விழுந்து கண்ணில் அடிபட்டுவிட்டது என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.அதையடுத்து, சிறுவனை புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவனின் கண் கருவிழி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில், தனது மகனுக்கு எப்படி கருவிழி பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என, சிறுவனின் பெற்றோர் மருதுார் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை