உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரமோற்சவ விழா நாளை துவக்கம்

பிரமோற்சவ விழா நாளை துவக்கம்

புதுச்சேரி; தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரமோற்சவ விழா நாளை 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதையொட்டி அன்று காலை 9:00 முதல் 10.30 மணி வரை கணபதி ஹோமம், தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.2ம் தேதி முதல் 11ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு காலை அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.வரும் 7 ம் தேதி காலை 9:00 மணிக்கு பொய்யாமொழி விநாயகருக்கு 1,008 பால்குட அபி ேஷகம், 9ம் தேதி காலை 9:45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. 10ம் தேதி மாலை 5:00 மணிக்கு தீர்த்தவாரி, 11ம் தேதி இரவு 10:00 மணிக்கு முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.ஏற்பாடுகளை அறங்காவலர் மணிகண்டன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை