உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு 

வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு 

புதுச்சேரி: வினோபா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூலக்குளம், மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் விமலா போன்பப்பா, 60; இவர் பிரான்சில் வசித்து வரும் தனது மருமகன், ஸ்டேன்லிக்கு சொந்தமான வினோபா நகரில் உள்ள வீட்டை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்டேன்லி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தது கிடப்பதாக விமலா போன்பப்பாவிற்கு தகவ ல் வந்துள்ளது. இதையடுத்து, நேற்று கா லை வீட்டிற்கு சென்று பார்த்தபோது, உள்ளே இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் மர்மநபர்க ளால் திருடப்பட்டிருந்தது. விமலா போன்பப்பா கொ டுத்த புகாரின் பேரில் தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ