உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் சாதனை

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் சாதனை

புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில், எண்டோஸ்கோபிக் முறையில் மார்பக புற்றுநோய் சிகிச்சையை, மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்து, சாதனை செய்துள்ளனர்.சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டருக்கு, மார்பக புற்று நோய் பாதித்த 46 வயதுள்ள பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவர்கள், மார்பகத்தில் புற்றுநோய் கட்டி இருந்ததை கண்டறிந்தனர். மார்பகத்தை அகற்றாமல், மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புற்றுக்கட்டியை அகற்ற, சிறப்பு மருத்துவர் ரம்யா மற்றும் மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.அதன்படி, எண்டோஸ்கோபிக் மாஸ்டெக்டோமி சிகிச்சையில், அப்பெண்ணுக்கு மார்பகத்தில் ஒரு சிறிய கீறல் வழியாக, குறைவான வலியுடன் புற்று திசுவை அகற்றி, அறுவை சிகிச்சையை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அப்பெண் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.இதுகுறித்து, புற்றுநோயியல் தலைவர் தினேஷ் மாதவன் கூறுகையில், 'இந்தியாவிலேயே முதன் முறையாக, எண்டோஸ்கோபிக் முறையை பயன்படுத்தி, பெண்ணின் எதிர்காலம், மற்றும் அழகில் எவ்வித மாற்றமும் குறையாமல், மார்பகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், புற்றுநோய் கட்டி திசுக்களை மறுசீரமைப்பு செய்து, அகற்றப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை, மிகவும் சவாலாக இருந்தது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !