உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பேரணி

பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி: கடற்கரைசாலையில் டிஸ்லெக்சியா,ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி சார்பில் டிஸ்லெக்சியா, ஆட்டிசம், ஏ.டி.எச்.டி., துருதுருதன்மை, படிப்பில் பின்தங்கிய மாணவர்கள், இடைநிற்றல், ஆதரவற்ற மாணவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் முன்னிலை வகித்தார். காந்தி திடலில் துவங்கிய பேரணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் டாக்டர்கள் மகாதேவன், கோபிநாத், பாலன் ஸ்டீபன், வித்யா, சத்தியமூர்த்தி, பேராசிரியர் பாஞ்ராமலிங்கம், போப் ஜான்பால் கல்வியியல் கல்லுாரி முதல்வர், வெங்கடேஸ்வரா கல்லுாரி முதல்வர், ஜிப்மர், அரசு பொதுமருத்துவமனை செவிலியர்கள், தர்ம சம்ரக் ஷண சமிதி, வேதபாரதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டுப்ளக்ஸ் சிலை அருகே நிறைவு பெற்ற பேரணியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் கூறியதாவது:டிஸ்லெக்சியா, ஆட்டிசம், ஏ.டி.எச்.டி., துருதுருதன்மை குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். டிஸ்லெக்சியா பார்வையில் கண்டுபிடிக்க முடியாது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் வெகுளியாகவும், தனிமை விரும்பிகளாக இருப்பர்.ஏ.டி.எச்.டி., பிரச்னை இருக்கும் குழந்தைகள் துருதுருதன்மை உள்ளவர்களாக இருப்பர். கவனக்குறைவு, மாற்றம் தேடுபவர்களாகவும் இருப்பனர்.இவர்களை எப்போது அமைதியாக வைத்திருக்க வேண்டும். இம்மாணவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்களது சூழ்நிலைக்குகேற்ப பெற்றோர், ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்பேரணி நடத்தப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை