தென்னிந்திய மல்யுத்த போட்டி புதுச்சேரி வீரர்களுக்கு வெண்கலம்
புதுச்சேரி: தென்னிந்திய அளவிலான மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் பெற்ற இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில், 6வது தென்னிந்திய அளவிலான மல்யுத்த போட்டி, தமிழகத்தின் மேட்டூரில் நடந்தது. இதில், புதுச்சேரி அரசு அங்கீகாரம் பெற்ற யுனைடெட் புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், பங்கேற்ற வீரர்கள் ஜெயஸ்டூ, ஜபேஷ் கண்ணா ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.அவர்கள், புதுச்சேரி மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் வினோத் தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். துணை செயலாளர் ஜெகன், தாமோதரன், பொருளாளர் சோமசுந்தரம் உட்பட பலர் உடனிருந்தனர்.