உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பல் மருத்துவ கல்லுாரியில் பி.டி.எஸ்., சீட் 125 ஆக அதிகரிப்பு

அரசு பல் மருத்துவ கல்லுாரியில் பி.டி.எஸ்., சீட் 125 ஆக அதிகரிப்பு

அரசு மருத்துவ கல்லுாரியில் பி.டி.எஸ்., சீட்டினை 125 ஆக அதிகரித்து கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.கோரிமேட்டில் கடந்த 1990ம் ஆண்டு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி 40 பி.டி.எஸ்., சீட்டுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. கல்லுாரி ஆரம்பிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்காகவே இக்கல்லுாரி வேகமாக வளர்ச்சியை எட்டி பிடித்தது. இதன் காரணமாக அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலிலும் 35-வது இடத்தை பிடித்து அசத்தியது.தற்போது மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரியில் 110 பி.டி.எஸ்., சீட்டுகள் உள்ளன. இதில், புதுச்சேரி மாணவர்களுக்கு-44 பி.டி.எஸ்., சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு-17 சீட்டுகள், சுயநிதி பிரிவில்-47, என்.ஆர்.ஐ., -2 சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன.எம்.டி.எஸ்., முதுநிலை படிப்பினை பொருத்தவரை புதுச்சேரி மாணவர்களுக்கு-8 சீட்டுகள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு-10, என்.ஆர்.ஐ.,-1 என 19 சீட்டுகள் உள்ளன.இந்நிலையில் பி.டி.எஸ்., படிப்பில் தற்போதுள்ள 110 சீட்டுகளை 125 சீட்டுகளாக அதிகரித்து மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசும், மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எண்ணிக்கையும் இந்தாண்டு கனிசமாக உயருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை