உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்: குரூப்–பி, குரூப்–சி பணி இடங்களுக்கு முக்கிய அறிவிப்பு

பட்ஜெட்: குரூப்–பி, குரூப்–சி பணி இடங்களுக்கு முக்கிய அறிவிப்பு

கவர்னர் உரையில் அரசு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு:  அரசுப் பணியாளர் தேர்வை வெளிப்படையாகவும், விரைவாகவும் நடத்துவதற்காக, புதுச்சேரி தேர்வாணையம்  அமைக்கப்பட்டுள்ளது. இனி அரசிதழ் பதிவு அல்லாத குரூப்–பி- மற்றும் குரூப்–சி- பணியிடங்களுக்கான தேர்வுகளை இந்த ஆணையம் நடத்தும். ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு, ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக தேர்வு நடத்த வேண்டிய அவசியம் குறையும். நிர்வாக செயல்திறன் மேம்பட்டு,தேர்வு நடைமுறைகள் விரைவாக முடிவடைவதுடன், இளைஞர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்