உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம்

வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க முகாம்

திருபுவனை : இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, குரும்பாபேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம்- 2025, மதகடிப்பட்டு பாளையத்தில் நடந்தது.வளமான விவசாயி, நாட்டின் பெருமை என்ற வேளாண் துறையின் முக்கிய முயற்சியான வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மதகடிப்பட்டு, உழவர் உதவியகம் வேளாண் அதிகாரி நடராஜன் வரவேற்று மண்வளம், மண்மாதிரி சேகரிப்பு, மண்வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்து விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.சென்னை மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவன வேளாண் நிபுணர் ஜெயந்தி, வளமான விவசாயி நாட்டின் பெருமை என்ற வேளாண்மை முயற்சியின் தொழில்நுட்ப உத்திகள் குறித்தும், மத்திய அரசின் வேளாண் சார் திட்டங்கள் மற்றும் நன்னீர் இரால், மீன், நண்டு வளர்ப்பு குறித்தும் விளக்கினார்.வேளாண் அறிவியல் நிலைய வித்யா உயிரியல் பூச்சிக்கொல்லிகள், அதன் உற்பத்தி மற்றும் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை