உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் அமைக்கும் பணி

வாய்க்கால் அமைக்கும் பணி

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் வடிகால் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் தொகுதி, நேரு நகரில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 61.30 லட்சம் மதிப்பில் 'ட' மற்றும் 'ப' வடிவ வாய்கால் 835 மீட்டர் கட்டப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் ஜலில், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ