கனரா வங்கி தொழில் கடன் திருவிழா நாளை நடக்கிறது
புதுச்சேரி : புதுச்சேரி கனரா வங்கி சார்பில், தொழில் கடன் திருவிழா, நாளை தனியார் ஓட்டலில் நடக்கிறது.புதுச்சேரி ரெட்டியார்பாளையம், ஓட்டல் அபி கிருஷ்ணாவில், நாளை 7ம் தேதி மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை முகாம் நடக்கிறது. இதில், எம்.எஸ்.எம்.மி., நிறுவனங்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய தொழில் துவங்க கடன் வழங்கப்படுகிறது. மேலும், தொழிலை அபிவிருத்தி செய்யவும், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் கடன் வழங்கப்படுகிறது. முத்ரா, பி.எம்., இ.ஜி.பி., சோலார் உள்ளிட்ட இதர தொழில் தொடர்பான கடன் வழங்க முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் துவங்க ஆர்வம் உள்ள படித்த இளைஞர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இத்தகவலை வங்கி தொழில் பிரிவு, துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.மேலும், விபரங்களுக்கு, 9750211450 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.