காஷ்மீரில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
புதுச்சேரி: காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு, புதுச்சேரி மாநில பொது நல அமைப்புகள் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.ராஜா தியேட்டர் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவர் நேரு எம்.எல்.ஏ., மற்றும் பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள், அங்கத்தினர், இளைஞர்கள் கலந்துகொண்டு, தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.