உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.20 கோடியில் தீபாவளி தொகுப்பு கான்பெட் நிறுவனம் தீவிர ஏற்பாடு

3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.20 கோடியில் தீபாவளி தொகுப்பு கான்பெட் நிறுவனம் தீவிர ஏற்பாடு

புதுச்சேரி, : ரேஷன் கார்டுதார்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்குவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு அரசு சார்பில், 3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தலா ரூ.585 மதிப்பில் 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சமையல் எண்ணெய், ஒரு கிலோ கடலைப்பருப்பு, ரவை மற்றும் மைதா தலா அரை கிலோ உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ரூ. 20 கோடி செலவில் வழங்கப்பட உள்ள இந்த தொகுப்பிற்கான கோப்பிற்கு, நிதித்துறை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து இந்த கோப்பு நேற்று கவர்னரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னரின் அனுமதி கிடைத்ததும், உடனடியாக தீபாவளி தொகுப்பு பொருட்களை முதல்வர் ரங்கசாமி தலைமையில் வழங்குவதற்கான பணியை கான்பெட் நிர்வாகம் வேகமாக செய்து வருகிறது. தீபாவளிக்கு நான்கு நாட்களே உள்ளதால், அனைவருக்கும் தொகுப்பு பொருட்கள் வழங்க முடியாத சூழல் உள்ளது. அதனால், தீபாவளிக்கு பின்பும் தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி