சென்டர் மீடியனில் கார் மோதல்; வாலிபர் உயிர் தப்பினார்
கோட்டக்குப்பம்; கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில், வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.தர்மபுரியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் நித்திஷ்,22; இவர் தனது நண்பர்கள் மூவருடன், நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அவர்கள், கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.நேற்று காலை 10;00 மணிக்கு டிபன் வாங்குவதற்காக, நித்திஷ் தனது மாருதி சியாஸ் காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில், பொம்மையார்பாளையம் மடம் அருகே சென்றபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், நித்திஷின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதியது.உடன் காரில் இருந்த ஏர் பலுான் விரிந்ததால், நித்திஷ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். விபத்தில் கார் சேதமானது. விபத்து குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.