உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து கார் டிரைவர் பலி 

மயங்கி விழுந்து கார் டிரைவர் பலி 

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான நவமால்காப்பேர், பள்ளித் தென்னல், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 38; டிரைவர்.சரவணன் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த பிரதாப் என்பவரின் வீட்டில் கார் ஓட்டி வந்தார். நேற்று காலை 11:00 மணிக்கு, பணியில் இருந்த போது, திடீரென காரிலேயே சரவணன் மயங்கி விழுந்தார்.இதையடுத்து, பிரதாப்பை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மனைவி அன்பரசி அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !