உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சகோதரர்களை தாக்கிய மூவர் மீது வழக்கு 

சகோதரர்களை தாக்கிய மூவர் மீது வழக்கு 

புதுச்சேரி : வாணரப்பேட்டையில் சகோதரர்களை தாக்கிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வாணரப்பேட்டை பிரான்சுவாதோப்பு இளஞ்செழியன், 45; தென்னஞ்சாலையில் அச்சகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பணியை முடித்து கொண்டு பஞ்சரான தனது பைக்கை தள்ளிக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பு பகுதியைச் சேர்ந்த அகஸ்டின், ஜான்சன், அடையாளம் தெரியாத ஒருவர் ஆகியோர் வழிமறித்து, இளஞ்செழியனிடம் தகராறு செய்தனர்.சம்பவ இடத்திற்கு இளஞ்செழியனின் சகோதரர் பார்த்திபன் வந்தார். இருவரையும் அகஸ்டின் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின்பேரில், அகஸ்டின், ஜான்சன் உட்பட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை