உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரில் பஞ்சாயத்து ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பாரில் பஞ்சாயத்து ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

நெட்டப்பாக்கம்: முன் விரோதத்தில் பஞ்சாயத்து ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மிட்டா மண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 37; மண்டகப்பட்டு பஞ்சாயத்து 100 நாள் வேலை திட்ட சூப்பர்வைசர். இவர் கடந்த 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஏரிப்பாக்கத்தில் உள்ள ரெஸ்ட்ரோ பாரில் தனது நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த ஏரிப்பாக்கத்தைச் சேர்ந்த சபரி, 28; பரத், 30; சரவணன், 26; ஜெகன், 30; ஆகியோர் முன் விரோதம் காரணமாக ஜெகதீசை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த ஜெகதீஷ் சிகிச்சை பெற்று நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சபரி, பரத், சரவணன், ஜெகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ