உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: பாட்டுக்கச்சேரியில் ஏற்பட்ட இரு தரப்பு மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.புதுச்சேரி கடப்பேரி குப்பம் பகுதியில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி இசைச்கச்சேரி நடந்தது. இதில் கடப்பேரிக்குப்பம்பகுதியை சேர்ந்த செந்தமிழன் 31, அவரது சகோதரர் செழியன் 34, ஆகியோர் கலந்து கொண்டு, கச்சேரியை பார்த்துகொண்டு இருந்தனர்.அப்போது அதேபகுதியை சேர்ந்த கீர்த்தனா, மணிவேல், மதன் மற்றும் கிருபா ஆகியோரும் இசை நிகழ்ச்சி பார்க்க வந்துள்ளனர். இதனிடையே செந்தமிழன் மற்றும் கீர்த்தனா, மணிவேலுக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதில் இருதரப்பினர் மாறி, மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கீர்த்தனா சேதராப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் செந்தமிழன் மற்றும் செழியன் மீது வழக்குப்பதிந்தனர். இதேபோல் செழியன் புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் மதன், கிருபா மற்றும் மணிவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை