உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊழியரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

ஊழியரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

நெட்டப்பாக்கம், : தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ஏரிப்பாக்கம் புதுக்காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 25; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கருக்கும் முன் விரோதம் உள்ளது. கடந்த 12ம் தேதி மதியம் சங்கர், உறவினர்கள் மஞ்சுளா, வரதன், வினோத்ராஜ், ராஜேஸ்வரி, தனலட்சுமி, திரிஷா ஆகியோர் ராஜா வீட்டிற்கு வந்து அவரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பலத்த காயமடைந்த ராஜா ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை