மேலும் செய்திகள்
ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு
27-Oct-2026
டி நகர் போலீசார் நேற்று (நவ.,1) தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சந்துருகுமார்,32; என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட பூத்துறை முரசொலிராஜன்,30; ரெட்டியார்பாளையம் மனோஜ்கிருஷ்ணன்,30; திலாஸ்பேட்டை நாராயணன்,49;செயின்ட்பால்பேட் ஜெகன்,28; ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். முதலியார்பேட்டை போலீசார் நேற்று வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சாரம் வேலாயுதம்,38; பூமியான்பேட்டை அன்பரசன்,34; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.
27-Oct-2026