மேலும் செய்திகள்
வினாடி வினா போட்டி ெஹல்மெட் பரிசு
14-Jan-2025
பாகூர்: சாலையோரம் கடை அமைத்து ஹெல்மெட் விற்பனை செய்த பீகார் மாநிலத்தவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்தனர்.புதுச்சேரியில் கடந்த 12ம் தேதி முதல் கட்டாய ெஹல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது. ெஹல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால், புதுச்சேரியில் ஹெல்மெட் விற்பனை சூடுபிடித்தது. வட மாநில வியாபாரிகள், சாலையோரம் கடைகளை அமைத்து தரமற்ற ஹெல்மெட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், புதுச்சேரி தெற்கு போக்கு வரத்து போலீஸ் எஸ்.பி., மோகன்குமார், தலைமை யில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ஆய்வு செய்து, சாலையோர ஹெல்மெட் வியாபாரிகளை எச்சரித்து, கடைகளை அப்புறப்படுத்தினர்.இந்நிலையில், மீண்டும் போக்குவரத்திற்கு இடையூறாக நோணாங்குப்பத்தில் ஹெல்மெட் விற்பனை செய்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமன் குமார் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Jan-2025